‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’: டிரம்ப்

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால்  30 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில்  10 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

கொரோனா பரவத் துவங்கியதிலிருந்தே  சீனாவின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணம் சீனாவின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (27ம் திகதி) செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியதாவது:

ஆரம்பத்திலேயே இந்த வைரசை சீனாவில் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அப்போதே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால்  உலகம் முழுவதும் பரவி இருக்காது. இதனால் சீனாவிலிருந்து வைரஸ் பரவியது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்.

வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜேர்மனி 165 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் கேட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் உலகிற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சேதம் இது. அதனால்  ஜேர்மனி கேட்கும் தொகையைவிட அதிகமான தொகையை நாங்கள் கேட்க உள்ளோம். இறுதித் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அமெரிக்கா  ஜேர்மனி உட்பட பல நாடுகள்  கொரோனா விவகாரத்தில் சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருவதோடு  இழப்பீடு கேட்க தயாராகி வருகின்றன.  இந்நிலையில்  சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூவா சுனியிங் கூறுகையில்  'கொரோனா தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள். வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உங்களது சக்தியைச் சேமிப்பது நல்லது' எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 04/29/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை