பொரிஸ் ஜோன்ஸன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரிட்டிஷ் பிரதமர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

லண்டனிலுள்ள புனித தோமஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 55 வயதான பிரிட்டிஷ் பிரதமர்,  வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (06) மாலை சேர்க்கப்பட்டார்.  இந்நிலையில், அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட முன்னர் ஒக்ஸிஜன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அவசியமான அரசியல்  நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு வெளியுறவுச் செயலாளர் டொமினிக் ராவ்விடம், பிரிட்டிஷ் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 52,279ஆக காணப்படுவதோடு, 5,385 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. 

 

Tue, 04/07/2020 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை