ஆயுதங்களுக்கு செலவிடுவதை குறையுங்கள்

உலக நாடுகள் ஆயுதங்களுக்கு செலவிடும் தொகையை உடனடியாக குறைக்க வேண்டும் என ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி மிக்கைல் கொர்பச்சோவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் 21 இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு இலட்சத்து 45 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

கண்ணுக்குத்தெரியாத இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் வல்லரசு நாடுகள் என தங்களை கூறிக்கொள்ளும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் திணறி வருகின்றன.

கொரோனா வைரஸ் ஒருபக்கம் அச்சுறுத்தி வந்தாலும் உலக நாடுகள் ஆயுத உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனையில் தொடந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆயுதங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து வருகின்றன. மேலும், பல நாடுகளில் சண்டைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் ஆயுதங்களுக்கு செலவிடும் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை உடனடியாக குறைக்க வேண்டும் என ஒருங்கிணைந்த ரஷ்யாவின் கடைசி ஜனாதிபதியான மிக்கைல் கொர்பச்சோவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

மேலும், உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஐக்கிய நாடுகள் பொது சபையில் சிறப்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

அந்த கூட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று அவர் உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Sat, 04/18/2020 - 14:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை