கந்தளாய் விவசாயிகளுக்கு பசளை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது வேற்கொள்ளப்பட்டு வரும் சிறுபோக நெற்செய்கைக்கான பசளை வகைகள் கந்தளாய் லக்போகர நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் நீரினைப் பயன்படுத்தி 16 ஆராயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவதற்கான பசளை வகைகளே வந்தடைந்துள்ளதாக கந்தளாய் லக்போகர நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

யூரியா மற்றும் சேற்றுப்பசளை சல்பேற்று உட்பட வேளாண்மைக்கான பசளைகளும் வந்தடைந்துள்ளதாகவும்,கந்தளாய், வான்எல,பேராறு,ஜயந்திபுர போன்ற பகுதிகளுக்கான பசளைகளை உரிய பகுதி விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கந்தளாய் லக்போகர நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கந்தளாய் தினகரன் நிருபர் 

Mon, 04/20/2020 - 07:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை