கிளிநொச்சியில் கொரோனா இல்லை; தேவையற்ற அச்சம் வேண்டாம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்றில்லை. முழங்காவில் நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தhர்.

நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த 13ஆம்  திகதி  ஜா-எல, மட்டக்குளி, ராகம பிரதேசங்களிலிருந்து 32 பேர்  மேற்படி கடற்படை தனிமைப்படுத்துல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இவர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்றpருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தவறான செய்தி பரவியதால் அவர்களிடம் அச்சம் ஏற்பட்டது. எனவே இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவிய போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா  தொற்று ஏற்படவில்லை. அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகிறன. எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். சுகாதாரப் பிரிவினரது ஆலோசனைகளை பின்பற்றி நோய் வரும் முன் காக்கும் பணிக்கும் ஒத்துழைப்பு தாருங்கள் என்றார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Thu, 04/16/2020 - 13:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை