அரசின் நடைமுறைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

சமூர்த்தி பெறுவதற்கு தகுதியான காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயனாளிக் குடும்பங்களுக்கான 5000.00 ரூபா கொடுப்பனவை கையளிக்கும் நிகழ்வு (17) மருதமுனையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேலதிக அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தர். தொடர்ந்து இங்கு  உரையாற்றும் போது,ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் போது மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதிகளில் பிள்ளைகள் வழமைபோன்று விளையாடுகிறார்கள். பொலிசார் வந்தால் ஓடுகிறார்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்பது புரியாமல் செய்கிறார்கள் பெற்றோர்கள் இதனை தடுக்க முன்வர வேண்டும் வேண்டும்.

இன்று முஸ்லிம் சமூகத்தவர்களின் ஜனாசாக்களை கூட அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடிவாங்கும் சமூகமாக இந்த சமூகத்தை மாற்ற ஏன்? நினைக்கின்றீர்கள். அம்பாறை நகருக்கு சென்று பார்த்தால் அங்கு வீதிகளில் சிறுவர்களை காணமுடியாது. முதியோர்கள் வெளியில் வருவது கிடையாது.

அந்த மக்கள் சட்டத்தையும் சுகாதார நடைமுறையையும் மிகவும் அக்கறையோடு கடைப்பிடிக்கிறார்கள். ஒப்பீட்டளவில் நாம் இன்னும் இந்த நோய் தொடர்பான பாரதூரத்தை உணராமல் இருக்கிறோம். இந்த நிலையில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும். அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகிற சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், மாவட்ட சமூர்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ், கணக்காளர் வை.கபீபுல்லா, வங்கி முகாமையாளர் எம்.எம்.முபீன், எம்.ஐ.எம்.முஜீப் உட்பட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)     

Sat, 04/18/2020 - 12:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை