பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு

பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு-Moque Till Robbery-Kattankudy

காத்தான்குடி ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று (05) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு-Moque Till Robbery-Kattankudy

காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலின் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியல் பெட்டியொன்று உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பள்ளிவாயலுக்குள் இருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு-Moque Till Robbery-Kattankudy

பள்ளிவாயல் மூடப்பட்டிருந்த நிலையிலேயே இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக பள்ளிவாயல் நிருவாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு-Moque Till Robbery-Kattankudy

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு-Moque Till Robbery-Kattankudy

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

Sun, 04/05/2020 - 22:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை