நாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை தீவிரம்

நாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை தீவிரம்-Police On Special Operation

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை முறையாக பேணுவது தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசேட அதிரடிப்படை  இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை இரவு  பகலாக முன்னெடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை தீவிரம்-Police On Special Operation

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை தொடர்ந்து நேற்று (13) இரவு முதல் இன்று (14) முற்பகல் வரை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மேற்குறித்த பொலிஸ் எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை தீவிரம்-Police On Special Operation

அத்துடன் ஊரடங்கு சட்டம் காரணமாக வீட்டில் இருந்து புத்தாண்டு தினத்தினை கொண்டாடுமாறு பொலிஸார் ஒலிபெருக்கி வாயிலாக அடிக்கடி அறிவுறுத்தல்களை செய்து வருவதுடன் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட மட்டில் இடம்பெற்று வருகிறது . மேலும் இப்பகுதியில்  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி அநாவசியமாக நடமாடி திரிபவர்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக   பொலிசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை தீவிரம்-Police On Special Operation

மேலும்  அம்பாறை   நகரப்பகுதி  கல்முனை மாநகர பகுதி  பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு மணல்சேனை கல்முனைக்குடி சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் அட்டப்பளம் மாவடிப்பள்ளி சம்மாந்துறை மல்வத்தை உள்ளிட்ட பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் நேற்று  முதல் இன்று அதிகாலை வரை அப்பகுதிகள்  வெறிச்சோடிக்காணப்பட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கை பேணுவதில் பாதுகாப்புப் படை தீவிரம்-Police On Special Operation

சில இடங்களில்  பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர்  வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.இதற்கு மேலதிகமாக இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி விசேட வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு  வருகின்றனர் .

பாறுக் ஷிஹான்

Tue, 04/14/2020 - 15:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை