காத்தான்குடி நகர சபையின் அறிவுறுத்தலை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

காத்தான்குடி நகர சபையின் அறிவுறுத்தலை மீறி வர்த்தக நிலையங்களை திறந்த ஒரு சில வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக காத்தான்குடி நகர சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அந்த வர்த்தக நிலையங்களுக்கு காத்தான்குடி நகர சபையினால் பூட்டு போடப்பட்டன.

நேற்று(16.04.2020) வியாழக்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பாமசிகள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் திறக்கக் கூடாது என காத்தான்குடி நகர சபை அறிவித்தும் அறிவித்தலை மீறி ஒரு சில வர்த்தக நிலையங்களை திறந்தவர்களுக்கு எதிராக காத்தான்குடி நகர சபையினால் சட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டதுடன் குறித்த வர்த்த நிலையங்களுக்கும் நகர சபையினால் பூட்டுப் போடப்பட்டன.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர்  தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Fri, 04/17/2020 - 13:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை