பொலிஸ் நிலையம் நுழைந்து பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது

பொலிஸ் நிலையம் நுழைந்து பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது-Suspect Arrested for Threatening IP of Wariyapola Police Station

வாரியபொல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் வாரியபொல பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாரியபொலவில் உள்ள பொத்துவெல பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இரவு, பொலிஸார் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டி, அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, குறித்த நபரை கைதுசெய்ய வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

இது குறித்து உடனடியாக தனது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு குறித்த பொலிஸ்  பரிசோதகர், அறிவித்துள்ளார்.

இவர் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த மதுபான வர்த்தகர் நேற்றையதினம் (19) பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவருடன் தேரர் ஒருவர் உள்ளிட்ட மற்றொரு நபர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து குறித்த பொலிஸ் பரிசோதகரை அச்சுறுத்தி, அவரை தள்ளி விட்டு தாக்க முயன்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த பொலிஸ் பரிசோதகரின் தலை சுவரொன்றில் மோதியதாகவும் பின்னர் குறித்த சந்தேகநபர் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸ் நிலையத்திற்கு வந்த தேரர் உள்ளிட்ட மூவரும் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குடிபோதையில் இருந்தாரா என்பதை ஆராய, குருணாகல் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தள்ளிவிடப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) பொலிஸார் அறிக்கைகளை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த தேரர் மற்றும் குறித்த சட்டவிரோத மதுபான விற்பனையாளர் கைது செய்யப்படாமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, இது தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Wed, 04/22/2020 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை