இரு தினங்களில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணம் என்ன?

இதற்கு முன்னர் கொரோனா தொற்றியோருடன் தொடர்பு வைத்திருந்தவர்களே கடந்த தினங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டதாக பிரதான தொற்று நோய் ஆஸ்பத்திரி தொற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.

இந்த நிலையில் மேலும் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியிருக்கிறதென கூற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களில் கூடுதலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த தினங்களில் கூடுதலானவர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பிலே கூடுதலானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பாக ஆராய்ந்ததில் அவர்கள் கூடுதலாக பயணங்களை மேற்கொண்டு வரும் நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் கூறினார். இதனாலே கடந்த இரு தினங்களும் கூடுதலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது சுமார் 300 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை பேருக்கு நோய் தொற்றியுள்ளதென இப்போதே கூற முடியாதுள்ளது. இருந்த போதும் சகல கொரோனா தொற்று நோயாளர்களையும் அடையாளம் காண தொடர்ச்சியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.  (பா)

Tue, 04/21/2020 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை