கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் கடமையேற்பு

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (16) அவர் பணிமனையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் கல்முனை வலயத்தின் 10வது வலயக்கல்விப் பணிப்பாளராவார்.

ஏலவேயிருந்த பணிப்பாளர் எம்.எஸ். அப்துல்ஜலீல் தனது 60 வயதில் நேற்றுமுன்தினம் ஓய்வுபெற்றதையடுத்து இப்பதில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த செ.புவனேந்திரன் காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப்  பயின்று காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று உயர்கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியில் பயின்றவராவார்.

கிழக்குப் பல்கலைக்கழக பௌதீக விஞ்ஞான பட்டதாரியான இவர் 2005 இல் பட்டதாரி ஆசிரியராக 2005 இல் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் பதவியேற்றார்.

பின்னர் இலங்கை கல்வி நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று கல்வி நிருவாக சேவைக்குள் 2009.03.23 இல் நுழைந்து கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் உதவி மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி இறுதியாக கல்முனை வலயத்தில் நிருவாகத்துக்குரிய பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இவர் பிரான்சில் கல்வி திட்டமிடல்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். கல்வி டிப்ளோமா மற்றும் நிருவாக டிப்ளோமா பட்டமும் பெற்றவராவார்.

காரைதீவு குறூப், நற்பிட்டிமுனை விசேட நிருபர்கள்

Fri, 04/17/2020 - 13:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை