தோட்டத் தொழிலாளர்கள் அன்றாட வாழ்வை கொண்டுசெல்வதில் திண்டாட்டம்

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வட்டவளை, கினிகத்தேனை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நாவலபிட்டிய, ஹட்டன், நோர்வூட், தலவாக்கலை போன்ற பெருந்தோட்டங்களில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கை கேள்விகுறியாக உள்ளதாக, மலையகத்தில் நாளாந்த கூலி வேலை செய்து தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலான அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், வறட்சி காரணமாகவும்  தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் கூட முன்னைய காலத்தைவிட குறைந்துள்ளதாக கவலைத் தெரிவிக்கின்றனர். இந்த சம்பளத்தைக்கொண்டு எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வது என்றும் கேள்வி எழுப்புகின்றனர். கொழும்பில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை  தொடர்ந்து  மலையகத்திற்கு வருகைதந்த பல இளைஞர் யுவதிகள் தமது குடும்பங்களுக்கு ஒரு சுமையாகியுள்ளனர். மலையகத்தில் நாளாந்த கூலிவேலைகளிலும், முச்சக்கர வண்டி செலுத்தியும் தமது குடும்பத்தை கொண்டு நடத்தியவர்களின் நிலை கேள்விகுறியாக உள்ளது. எனவே இவர்கள் அனைவருமே ஓதோ ஒரு வகையில் எவரிடத்திலிருந்தாவது தமக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பிலேயே உள்ளனர். சம்பந்தப்பட்ட தரப்பினரும் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இவர்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றனர்.

(கினிகத்தேனை நிருபர்)

Thu, 04/09/2020 - 11:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை