ஆபத்தை அறியாமலேயே பலர் இழைக்கும் தவறுகள்!

உங்களையூம் மற்றையோரையூம் கொரோனாவிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் நீங்கள் பேண வேண்டிய அவதானங்கள் எவை?

நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி கைகளைக் கழுவூகிறீர்கள். நீங்கள் வீட்டில் பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. இல்லையேல்இ கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து உள்ளது.

அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றாமல் நீங்கள் நடந்து கொள்வது முதல் தவறு. கொரோனா வைரஸ் உங்களைப் பாதிக்காது என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்களையூம் ஆபத்தில் சிக்க வைக்கப் போகிறீர்கள் என்று பொருள். இந்த வைரஸ் பாதுகாப்பின்றி நடந்து கொள்ளும் அனைவரையூம் பாதிக்கக் கூடியது. இப்படித்தான் தென் கொரியாவில் ஒரு பெண் பல நூறு பேருக்கும் கொரோனாவைப் பரப்பி விட்டார். பிறகு சில நாட்களிலேயே நோய் தொற்றியோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக உயர்ந்தது.

இது புதிய வைரஸ். மனித உடல் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுகிறது என்று சரியாகத் தெரியாது. ஒருவர் நோய் அறிகுறியற்றவராக இருக்கலாம். அறிகுறிகள் தெரியவே 6-7 நாட்களுக்கு மேலாகும். நமக்கு வராது என்ற முழு நம்பிக்கையில்தான் இன்று பலரும் அலட்சியமாக வெளியில் நடமாடுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட நபர் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் நபர்களுடன் நிச்சயமாக தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் உடனடியான தனிமைப்படுத்தப்பட வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இறப்பு வீதம் 14.8 ஆகும். 70 வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு 8 சதவீதம் என்று சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3.6 சதவீதமாகவூம்இ 50-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1.3 சதவீதமாகவூம் குறைந்துள்ளது. 49 வயதிற்குட்பட்டவரின் இறப்பு வீதம் 0.5 இற்கும் குறைவாக இருந்தது. எனவே வயது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

பல்பொருள் அங்காடிகள்இ பொதுப் போக்குவரத்து உணவகங்கள்இ விடுதிகள் போன்றவைகளில் நுழையூம் போது அவதானம் தேவை. தும்மலின் போது இருமலின் போது பரவூம் ஆபத்து உள்ளது.முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். சென்று வந்த பிறகு உங்கள் கைகளைக் கழுவூங்கள். கைகளுக்கு சனிடைசர் பயன்படுத்துங்கள். உங்களால் முடிந்தால் இறப்பர் கையூறைகளை அணியூங்கள். உங்கள் முகத்தைத் தொடவே கூடாது. பொது போக்குவரத்துஇ படிகளின் ஓரம் இருக்கும் கைப்பிடிச் சட்டம்இ கதவூ தாழ்ப்பாள்இ மின் ஆளிகள்இ கழிப்பறை ஃப்ளஷ்கள்இ லிப்ட் பொத்தான்கள் போன்றவற்றை தொட நேர்ந்தால் மீண்டும் உங்கள் கைகளை கழுவவூம். உங்கள் முகத்தைத் தொடாதீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் வசிப்போரின் செல்போன்களை தொடுவது நிச்சயம் நன்மை தருவதாகத் தோன்றவில்லை.

யாருடனும் கைகளை குலுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளின் முகத்தின் அருகே கைகளைக் கொண்டு செல்லாதீர்கள். உங்களுக்கு நோய் அறிகுறி இருப்பின்இ இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மற்றையோருக்கு நோயைப் பரப்பாமல் இருங்கள்.

ஏ.ரி.எம் இயந்திரங்களின் தொடுதிரை அல்லது பொத்தான்களை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் தொடுகிறார்கள். அவர்கள் எங்கிருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்டுகளை கடைகளில் பயன்படுத்தி விட்டு மீண்டும் கடைக்காரரிடம் இருந்து வாங்கும் போதும் அதிக கவனம் அவசியம். கைகளுடன் கார்ட்டையூம் கழுவி விடுங்கள்.

கொவிட் -19 இற்கு உடல் எவ்வாறு பதிலளிக்கும் என்பது ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது. உயிர்சத்து ஊ மற்றும் நு நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.

குடும்பமாகவே இருந்தாலும் அறிகுறிகள் இலேசாக இருக்கும் போதே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். நண்பர்களுடன் சந்திப்பானாலும் இப்போது தவிர்க்கப்பட வேண்டும். சீனாவூம்இ தென்கொரியாவூம் கொரோனா வைரஸ் பரவூவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் காரணமே தனிமைப்படுத்தியதுதான். இதை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் அழுத்தமாக நடைமுறைப்படுத்தவில்லை. அதனால்தான் அங்கெல்லாம் நோய் வேகமாகப் பரவியதாக உலக சுகாதார நிறுவனத்தினர் மற்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு பயணம் செய்வது பலரை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் பயணத்தின் போது வைரஸ் தொற்றக் கூடும். நாடு விட்டு நாடு கொரோனா வைரஸ் பரவியதே பயணங்களினால்தான். பயணிகளால் இந்த வைரஸ் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தொடர்ந்து பரவியது.

பெற்றௌர் அல்லது உறவினர்களைப் பார்க்கச் செல்வது அவர்களை பேராபத்தில் சிக்க வைக்கும். இது அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் சிக்க வைக்கிறீர்கள்.

கொவிட் -19 தொடர்பான ஆலோசனைகள் அல்லது செய்திகளை நீங்கள் தொடர்ந்து பேஸ்புக் அல்லது ட்விட்டர்இ மற்றும் றுhயவளயூ இல் படித்து விட்டு அவையெல்லாம் உண்மை என உறுதியாக நம்பி விடுவது பெரும் தவறு. இது உங்களை தேவையில்லாமல் கவலையடையச் செய்வது

 

(னுச. ஆழnமைய ளுவரஉணநnஇ ய ஆநனiஉயட ஆiஉசழடிழைடழபளைவ எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

 

Sat, 04/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை