அத்தியவாசிய சேவையில் ஹசீஸ் கடத்திய இருவர் கைது

அத்தியவாசிய சேவையில் ஹசீஸ் கடத்திய இருவர் கைது-2 Arrested with Hashish On Essential Service

மன்னார் பிரதான பாலத்தில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து ஹசீஸ் போதைப் பொருள் மற்றும் பல இலட்சம் ரூபாய் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் சோதனைச் சாவடியில் வைத்து கசீஸ் போதைப் பொருளுடன் இரண்டு நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (03) இரவு 11.20 மணியளவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தியவாசிய சேவையில் ஹசீஸ் கடத்திய இருவர் கைது-2 Arrested with Hashish On Essential Service

மன்னாரில் இருந்து கொழும்பிற்கு கடல் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கூலர் ரக வாகனம் குறித்த பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வந்துள்ளது.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து நேற்று இரவு 11.20 மணியளவில் குறித்த கூலர் வாகனம் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அத்தியவாசிய சேவையில் ஹசீஸ் கடத்திய இருவர் கைது-2 Arrested with Hashish On Essential Service

இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65.9 கிராம் ஹசீஸ் போதைப் பொருள், பல இலட்சம் ரூபாய் பணம் மற்றும் மதுபானப் போத்தல் என்பன மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த கூலர் வாகனத்தின் சாரதி உற்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்தியவாசிய சேவையில் ஹசீஸ் கடத்திய இருவர் கைது-2 Arrested with Hashish On Essential Service

குறித்த கூலர் வாகனம் அத்தியாவசிய உதவி என்றதன் அடிப்படையில் பாஸ் நடைமுறையூடாக  கடல் உணவுப்பொருட்களை கொழும்பிற்கு கொண்டு சென்று வந்துள்ளமை தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட போதைப்பொருள், பணம், மதுபானம் மற்றும் வாகனம் ஆகியவை இராணுவத்தினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப்  நிருபர் - எஸ்.றொசேரியன் லெம்பேட்)

Sat, 04/04/2020 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை