மட்டுநகரில் சிறுதொழில் புரியும் குடும்பங்களுக்கு மாநகர சபை அரிசி உதவி

மட்டக்களப்பு, புளியந்தீவு  தெற்கு வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு இன்றைய நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு மாநகரசபை நிதியில் கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாக அரசி மூடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா நிலைமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் முடக்கம் ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் அன்றாடம் சிறு தொழில் புரிந்து குறைந்த வருமானம் ஈட்டி வந்த குடும்பங்களின் நிலைமையினை அறிந்து இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய இடர் காலப் பகுதியில் அவர்கள் தங்களது அன்றாட வாழ்வினை சிரமமின்றி நடத்துவதற்கான சிறு உதவியாக அரிசி மூடைகள் வழங்கும் செயற்திட்டம் மாநகரசபை நிதியினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாநகர முதல்வர் தி.சரவணபவனின் வழிகாட்டலின் கீழ் மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும், மாநகரசபைப் பாதீட்டில் 30 மில்லியன் ஷரூபா ஒதுக்கீடு செய்து வட்டாரத்திற்கு 150 மூடைகள் வீதம் அந்தந்த கிராமசேவகர்களினூடாக தெரிவு செய்யபப்பட்ட மக்களுக்கு இவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இன்றைய தினம் புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்கான உதவிகள் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில்வழங்கப்பட்டன. புளியந்தீவு தெற்கு கிராமசேவை உத்தியோகத்தரிடம் இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான இராஜேந்திரம், ருபாகரன், மதன்,ஷரூபராஜ், அசோக், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட  பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Fri, 04/03/2020 - 12:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை