கிளிநொச்சியில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை; மாவட்ட அரச அதிபர் அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில்  அரிசிக்கான எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

மாவட்டத்தில்  அரிசிக்கான எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லை. போதிய நெல்  களஞ்சிய சாலைகளிலுள்ளதுடன் விவசாயிகளிடமும் கையிருப்பில் உள்ளன. தற்போது மாவட்டத்தில் 46ஆயிரத்து 825 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் 31ஆயிரத்து 603 பயனாளிகள் சமுர்த்தி மூலம் பயன் பெற்றுள்ளனர்.

அத்துடன் முதியோருக்கான கொடுப்பனவுகள், சிறு நீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.இதனை விட பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாக 1753 பேர் அடையாளம் கானப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அரிசிக்கான தட்டுப்பாடு இல்லை. அது ஒரு செயற்கையான தட்டுப்பாடாகவே காட்டப்படுகின்றது. சிறுபோக செய்கைகளுக்கான மானிய உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

பரந்தன் குறூப் நிருபர்

Sat, 04/18/2020 - 08:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை