புத்தளம் மினி சூறாவளி; நிவாரண பணிகள் முன்னெடுப்பு

புத்தளத்தில் மினி  சூறாவளியினால் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.  

புத்தளத்தில் நேற்று (15) மாலை வீசிய பலத்த காற்றினால் மாவட்டத்தின் 05 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 600 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம்  ஏற்பட்டுள்ளது.

சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்த மக்கள், வீடுகளை திருத்தியமைப்பதற்காக இழப்பீட்டுத் தொகை நாளையதினம் (17) பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று (15) மாலை பலத்த காற்று வீசியதனால், பல வீடுகள் சேதமடைந்திருந்தன.

கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் இவ்வாறு வீடுகள் சேதமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Thu, 04/16/2020 - 15:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை