பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணம் இதுவல்ல

மலையக மக்கள் முன்னணி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்

கொரோனா வைரஸ் பரவல் இலங்கையையும் சர்வதேசத்தையும் அச்சுறுத்திவரும் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்துவது பொறுத்தமானதல்ல என மலையக மக்கள் முன்னணி தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் இராதாகிருஷ்ணனிடம் வினவிய போது,

கொரோனாவிலுருந்து பாதுகாத்துக்கொள்ள தனிமையாக இருக்குமாறும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான பின்புலத்தில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் பொதுக் கூட்டங்களில் மக்கள் ஒன்று கூடியே கலந்துகொள்வர். ஒன்று கூடியே மக்கள் பிரதிநிதிகளையும் தெரிவு செய்வர். தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமல்ல.

ஜனநாயக நாட்டில் தேர்தலென்பது ஒரு உரிய காலத்திலேயே நடத்தப்பட வேண்டும். ஒரு பகுதியினரின் நன்மைகருதி, தேர்தலை நடத்த வேண்டிய காலத்திற்கு முன்பே நடத்த முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இவ்வாறான சூழலில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மக்கள் சுதந்திரமாக தமது அடிப்படை உரிமையான வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பதுடன், தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது.

எனவே இவற்றை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போடுவதே சிறந்த விடயமாகும் என்றும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடித்தில் வலியுறுத்தியுள்ளதாக இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பூண்டுலோயா நிருபர்

Sun, 04/19/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை