கொரோனா தொற்று நிலைமை; ஜனாதிபதியுடன் கலந்துரையாட தேசிய மக்கள் சக்தி கோரிக்கை

நாட்டில் இன்று உருவாகியிருக்கும் நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநூரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று  பரவியுள்ள நிலையில் முழு நாடுமே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்னமும் மக்களால் சுதந்திரமாக நடமாட முடியாது உள்ளது வீட்டை வெளியேற முடியாத நிலையில் ஊரடங்குச்சட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க முடியாத சூழ்நிலை அரசியல் கட்சிகளிடமும் மக்களிடமும்  காணப்படுகின்றது.

எனவே இது குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்து அடுத்து எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கலந்துரையாட விரும்புகின்றோம். பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர். அவர்களோடு நாங்களும் உடன்படுகிறோம். 

முடியுமான அளவு விரைவாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் அதேசமயம் அவசியப்பட்டால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை கூட்டி ஒரு இணக்கமான முடிவை எட்டுவதற்கு தாங்கள் முன்வர வேண்டும் இது குறித்தெல்லாம் உங்களுடன் கலந்துரையாட விரும்புகின்றோம். இதற்கு உரிய நேரத்தை உடனடியாக எமக்கு அறியத் தருமாறு தங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று அநுரகுமார திசாநாயக்க அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

எம்.ஏ.எம் நிலாம்

Sat, 04/18/2020 - 11:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை