திருகோணமலை பயனாளிகளுக்கு விசேட கொடுப்பனவு உதவிகள் வழங்கப்படவுள்ளன

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அசாதாரான சூழ்நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்பவும் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதன் ஓர்அங்கமாக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்கான நிதி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

அதன்படி திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த காத்திருப்போர் பட்டியல்களில் உள்ள சிறுநீரக நோயாளிகள் 289 பேருக்கு 1,445,000 ரூபாவும்,விசேட தேவையுடையோர் 1180 பேருக்கு 5,900,000 ரூபாவும், 70 வயதுக்கு மேற்பட்ட குறை வருமானம் கொண்ட முதியோர்கள் 1637 பேருக்கு 8,185,000 ரூபாவும் மற்றும் ஏற்கனவே பட்டியல்படுத்தப்பட்டு மாதாந்தம் 2000 ரூபாவை முதியோர் கொடுப்பனவாக பெற்றுவரும் பயனாளிகள் 6964 பேருக்கும் 2000 ரூபாவுக்கு புறம்பாக  ஒருவருக்கு 3000ரூபா என்றடிப்படையில் 20,892,000 ரூபாவுமாக மொத்தம் 10070 பயனாளிகளுக்கு 36,472,000 ரூபா நிதி கொடுப்பனவுக்காக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இக்கொடுப்பனவுகள் யாவும் எதிர்வரும் 6ம் திகதி தொடக்கம் 9ம் திகதிக்குள் பிரதேச செயலாளர்களின் ஊடாக பொருத்தமான பொறிமுறைமூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

(அப்துல்சலாம் யாசீம் - ரொட்டவெவ குறூப் நிருபர்)

Thu, 04/02/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை