பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் ஆண்டகையின் இறுதிச் சடங்கு நீர்கொழும்பில்

பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் ஆண்டகையின் இறுதிச் சடங்கு நீர்கொழும்பில்-Former Archbishop of Colombo, His Lordship Nicholas Marcus-Last Ritual

- பிரதமர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு
- நிலைமை சீரானதும் மறைந்த பேராயருக்கு இரங்கல் திருப்பலி

கத்தோலிக்க திருச்சபையின் ஓய்வுநிலை பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெனாண்டோ ஆண்டகையின் இறுதிக் கிரியைகள் நேற்று நீர்கொழும்பு முன்னக்கரை புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்டஓய்வுநிலை பேராயரும் முன்னாள் பல்கலைக்கழக வேந்தருமான ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை ஆகியோரின் தலைமையில் இறுதிச்சடங்கையொட்டிய திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இந்த இரங்கல் திருப்பலியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு பேராயரின் நாட்டுக்கான சேவைகள் தொடர்பில் உரையாற்றினார்.

அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த இரங்கல் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

முன்னாள் பேராயர் நிக்கலஸ்மார்க்கஸ் பெனான்டோ ஆண்டகை 60 வருடங்களுக்கு மேல் கத்தோலிக்க திருச்சபையில் அருட்தந்தை, பங்குத்தந்தை மற்றும் ஆயர் பேராயர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக பேராயராக பதவி வகிக்க ஆண்டகை  நாட்டுக்கும்நாட்டு மக்களின் நல்லிணக்கத்துக்கும் திருச்சபையின் செயற்பாடுகளுக்கும் அளப்பரிய பங்காற்றியவர்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமது இரங்கல் உரையில் மறைந்த பேராயரின் பெருமைகளை எடுத்துரைத்ததுடன் கண்ணீர் மல்க அவருக்கு விடைகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் குறிப்பிட்ட ஆயர்கள் மற்றும் குருக்களின் பங்கேற்புடன் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. பொதுமக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நாட்டு நிலைமை சீரானதும் மறைந்த பேராயருக்கான இரங்கல் திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும் அதன்போது மக்கள் பங்கேற்று தமது அஞ்சலிகளை செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/15/2020 - 14:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை