அம்பாறை விவசாயிகளுக்கு இலவச உரம் விநியோகம்

கொரோனா வைரஸ் அச்சம், ஊரடங்கு என்பனவற்றுக்கு மத்தியிலும் அம்பாறை மாவட்ட சிறுபோக விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்பட்டு வருகின்றது.  கமநல சேவை அபிவிருத்தி நிலையங்கள், பிரதேச கமக்காரர் அமைப்புக்கள் என்பன இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய  ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம், விவசாயிகளுக்கு இம்முறை முதன்முறையாக இலவச உரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதன்பிரகாரம், விவசாயிகள் யூரியா, பொட்டாசியம் (MOP), பொஸ்பரசு (TSP) உரம் என்பனவற்றை இலவசமாகப் பெற்று வருகின்றனர்.

இலவச உரத்திற்கான கோரிக்கைப் படிவத்தை, விவசாயிகள் முறையாகப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட விவசாய அமைப்பினூடாக பெரும்பாக உத்தியோகத்தருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தினை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் 50 கிலோகிராம் நிறையுடைய உரமூடையை 500 ரூபா மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர் 

Wed, 04/22/2020 - 07:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை