ஏறாவூர் சவுக்கடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

ஏறாவூர் சவுக்கடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி-Accident 22 Yr Old Dead-Eravur Savukkady

குடும்பத்தாருக்கு அறிவித்தபோது; முட்டாள்கள் தினம் என நம்பவில்லை

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் சவுக்கடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி-Accident 22 Yr Old Dead-Eravur Savukkady

ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் இன்று  (01) பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மட்டக்களப்பு, வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (22) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

ஏறாவூர் சவுக்கடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி-Accident 22 Yr Old Dead-Eravur Savukkady

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாகரையில் உள்ள உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தொலைபேசி மூலம் பலியான விடயத்தைக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் இன்று ஏப்ரல் ஃபூல் (உலக முட்டாள்கள் தினம்) எங்களுக்குத் தெரியும் PHONEஐ வையுங்கள் என்று அழைப்பை துண்டித்துள்ளனர்.

ஏறாவூர் சவுக்கடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி-Accident 22 Yr Old Dead-Eravur Savukkady

ஏறாவூர் சவுக்கடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி-Accident 22 Yr Old Dead-Eravur Savukkady

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம்)

Wed, 04/01/2020 - 20:21

from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக