உலகளவில் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று

உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியன் பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 53 ஆயிரத்து 195 பேர் உலகளாவிய ரீதியில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலுமாக 204 நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதுமாக 10 இலட்சத்து 15 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியவர்களில் 2 இலட்சத்து 12 ஆயிரத்து 392 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸினால்  பாதிக்கப்பட்டவர்களில்  7 இலட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளதோடு, அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 245,080 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தாலியில்  115,242 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  13,915ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் 112,065 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு  உள்ளாகியுள்ளனர்.  10,348 பேர் கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 335 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் இதுவரையில் 59 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பிரான்ஸில்  கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Fri, 04/03/2020 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை