பங்களாதேஷிலுள்ள மாணவர்களை அழைத்து வர விசேட விமானம்

பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து, இலங்கைக்கு வர முடியாமல் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 74 பேரை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்காக, இன்று (27) பிற்பகல் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானமொன்று, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷ் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1422 எனும் விமானம், இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷின் டாக்கா நகர் நோக்கி புறப்பட்டுள்ளது.

இவ்விமானப் பயணத்திற்காக எயார் பஸ் A320-214 வகை விமானம். ஶ்ரீலங்கன் விமான சேவையினரால் இயக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்விமானத்தில் விமானி  உட்பட விமான சேவை பணியாளர்கள் 07 பேர் பயணித்துள்ளனர்.

குறித்த விமானம், இன்று நண்பகல் 12.15 மணிக்கு புறப்படத் தயாராகவிருந்த போதும், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. அது சீர்செய்யப்பட்டு, ஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த விமானம் பங்களாதேஷ் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

இன்றிரவு 7.45 மணிக்கு குறித்த விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் வந்தடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mon, 04/27/2020 - 15:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை