அதிக வெப்பத்தால் கால்நடைகளுக்கு பாதிப்பு

திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் நிலவுகின்ற அதிக வெப்பத்தால் கால்நடைகள் மேய்ச்சலின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சராசரி வெப்பநிலை 35 பாகை செல்சியஸை விடவும் அதிகளவில் பதிவாதனால் புற்கள் கருகி மேய்ச்சலின்றியும், வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமலும் கால்நடைகள் நிழலில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பிரதேசத்தில் மழைபெய்து பல மாதங்களாகியுள்ளதால் கால்நடைகளுக்கு மேய்ச்சலின்றி அவதிப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோப்பூர் குறூப் நிருபர்

Sat, 04/18/2020 - 12:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை