பிரபல இசைக்கலைஞர் ஜயந்த ரத்நாயக்க காலமானார்

பிரபல இசைக்கலைஞர் ஜயந்த ரத்நாயக்க காலமானார்-Victor Ratnayake's Son Jayantha Ratnayake Passed Away

பிரபல சிங்கள இசைக் கலைஞர் ஜயந்த ரத்நாயக்க காலமானார்.

இவர் பிரபல சிங்கள பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் மூத்த புதல்வராவார்.

சிங்கள இசைத் துறையில் தந்தை வழியில், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய இரு பரிமாணங்களில் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது 51 வயதாகும்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றையதினம் (06) மரணமடைந்துள்ளார்.

இவரது இறுதிக் கிரியைகள் நாளை (07) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 04/06/2020 - 11:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை