நிவாரணப் பணிகளில் கல்முனை வெஸ்லி பழைய மாணவர் சங்கம்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்துடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சமூக அமைப்புக்களும் இந்து சமய நிறுவனங்களும் பணிகளில் இணைந்து கொண்டு நிவாரணப்பொதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இதற்கமைவாக கல்முனை வெஸ்லி (1990ஆம் ஆண்டின்) உயர்தர பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் ஆகிய அமைப்புக்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நிவராணங்களை வழங்கி வைத்தது.கல்முனை வெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் 50 பேருக்கான நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இடம்பெற்ற நிவாரணப்பணிகளில் அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிவாரணத்தை வழங்கி வைத்தனர்.இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர் எஸ்.கனகரெத்தினம் தலைமையிலும் நிவாரணப்பணிகள் இடம்பெற்றன. மன்றத்தின் கட்டடத்தில் இடம்பெற்ற இப்பணிகளில் மன்ற அங்கத்தவர்கள் கலந்துகொண்டு 40 பேருக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்  

Tue, 04/07/2020 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை