கிண்ணியாவில் வெளிமாவட்டத்தவர்கள் கடமை புரியும் கடையை பூட்ட பணிப்பு

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் டீ சந்தியில் உள்ள வீதியோர புடவைக் கடையை கால வரையறையின்றி மூடுமாறு கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் பொலிஸார் மூலமான பணிப்புரையை வழங்கினார்.

குறித்த வியாபார நிலையத்தில் வெளிமாவட்டத்தவர்கள் கடமை புரிவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று (09) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் தவிசாளர் தலைமையிலான பொலிஸார் குழு அங்கு சென்றிருந்தனர். உரிய வியாபார நிலையத்தில் வெளிமாவட்டத்தார் இருப்பதை உறுதிப்படுத்தியதன் பின் மறு அறிவித்தல் வரை கடைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

நாட்டில் நிலவும் கொவிட்19  கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில்  அசாதாரண சூழ் நிலை காரணமாக இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக வெளி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், கிண்ணியாவுக்குள் வருகை தந்தால் உடன் தனக்கு அறிவிக்குமாறும் தவிசாளர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

Fri, 04/10/2020 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை