சீனாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இறைச்சிச் சந்தைகள்

கொரோனா வைரஸ் பிரச்சினைக்குக் காரணமானதாகக் கருதப்படும் வெளவால்கள், எறும்பு தின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் இறைச்சி சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தைதான் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது, இங்கிருந்துதான்  வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. சீனாவில் தொடங்கி அமெரிக்கா வரை பல இலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்ததுடன் சுமார் 42000மக்கள் இந்த கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

வுஹானில் வனவிலங்குகளை விற்கும் ஒரு கடல் உணவு சந்தையில் இருந்துதான்  கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியதாக உலக சுகாதார அமைப்பு ஜனவரி 12அன்று தெரிவித்து இருந்தது. டிசம்பரில் தொடங்கி தற்போது நான்கு மாதங்கள் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 25முதல் சீனாவில் லொக்டவுன் திரும்பப் பெறப்பட்டது. தற்போது முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்டது.

பெய்ஜிங் உட்பட அனைத்து நகரங்களுமே இயல்பு நிலைக்கு வந்து விட்டன. கொரோனாவுக்குக் காரணமான வுகானில் கூட இயல்பான போக்குவரத்து காணப்படுகிறது. வைரஸை வென்று விட்டதாக சீனா பெருமிதத்துடன் உள்ளது. பிரச்சினை முடிந்து விட்டதாக சந்தோஷத்தில் உள்ளது.

ஆனால் சீனாவைத் தவிர உலகின் அனைத்து நாடுகளுமே கொரோனா வைரஸை தடுக்க வழி தெரியாமல் திணறி வருகின்றன, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் மிக மோசமாக உள்ளன. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் வுஹான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைக்கின்றனர். அவர்களின் உணவுப் பழக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு காரணமானதாகக் கருதப்படும் வெளவால்கள், எறும்புதின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் வனவிலங்கு சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் ஒரு வெளவாலிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவியது என்று விஞ்ஞானிகள் நம்புவதால் இந்த சந்தைகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்கள். சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 55வயதான கடல் உணவு சந்தையைச் சேர்ந்த ஒரு பெண் மூலமே முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு காரணமானதாக கருதப்படும் வெளவால்கள, எறும்புதின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் சந்தைகள், கடல் உணவு சந்தைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அப்படியே மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக அமெரிக்காவில் இருந்த வெளியாகும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இருப்பினும், சந்தைகள் அனைத்தும் காவலர்களின் கண்காணிப்புக் கண்களின் கீழ் செயல்படுகின்றன. இருப்பினும் இறைச்சியாக வெட்டி விற்கப்படும் நாய்கள், மற்றும் முயல்கள் போன்ற கொல்லப்பட்ட விலங்குகளை யாரும் விற்பனை செய்வதில்லை. உயிருடன் மட்டுமே விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பல விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் சீனாவின் வனவிலங்கு சந்தைகளுக்கு தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் சீனா இப்போது மீண்டும் திறந்துள்ளதால் தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. (ONE INDIA TAMIL)

Thu, 04/02/2020 - 07:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை