முகக்கவசத்தை மாத்திரம் முழுமையாக நம்ப வேண்டாம்!

நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும் வழிகள்

மக்கள் கிருமிநாசினிஇ முகக்கவசம் ஆகியவற்றை உபயோகப்படுத்தும் போதுஇகொரோனா வைரஸ் தடுக்கப்பட்டு விடும் என்று அதீத நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல என்று பிரபல மருத்துவ ஆராய்ச்சியகம் தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணிந்து கொள்வதன் ஊடாக எதிர்பார்க்கும் பயனைஇ வெளியே செல்லும் போது நம்மால் முழுமையாகப் பெற இயலாது என்றும் கூறப்படுகிறது. இருமல் அல்லது தும்மலின் மூலம் செல்லும் நீர்த்திவலைகள் முகக்கவசங்களுக்குள்ளும் செல்லும் தன்மை உடையனவாக இருக்கும்.

மேலும் முகக்கவசம் ஈரமானது போல உணர்ந்ததால் உடனடியாக அதனை அகற்றி விட வேண்டும். மருத்துவ முகக்கவசங்களை தயவூ செய்து திரும்ப உபயோகப்படுத்தி விடாதீர்கள். பிற முகக்கவசங்களை துவைத்து மீண்டும் பயன்படுத்தும் போது அவற்றின் சக்திகள் குறைந்து விடுகின்றன.

முகக்கவசத்தை முன் பக்கத்திலிருந்து கழற்றி விடக் கூடாது. பின்பக்கத்திலிருந்து மட்டும்தான் கழற்ற வேண்டும். மேலும் முகக்கவசத்தை அணியூம் போது சரியாக அணிந்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் அவற்றை சரி செய்து கொள்வதை தவிர்த்து விட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் காற்று வழியாகப் பரவூவதை விடஇ சுவாசத் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவூவதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வூகள் தெரிவிக்கின்றன. கொவிட்-19 தொற்று இருக்கும் பலருக்கு ஆரம்பத்தில் பெரிதாக எந்த அறிகுறியூம் தெரியாது. ஆனால் அவர்களும் நோய்க் காவிகளாவர்.

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்ப வைரஸ்கள். இவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நோயை ஏற்படுத்தும். மனிதர்களைப் பொறுத்தவரையில் பல கொரோனா வைரஸ்கள் சுவாச நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.

கொவிட்-19 நோயால் தாக்கப்படும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் மட்டும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுஇ மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறார். வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம்இ இதய பிரச்சினைகள் அல்லது நீரிழிவூ போன்ற மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்குக் கடுமையான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உலக அளவில் இந்த நோயால் பீடிக்கப்பட்டோரில் சுமார் 2மூ நோயாளர்கள் இறந்து விட்ட நிலையில் காய்ச்சல்இ இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் கண்டிப்பாக உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் இருப்பவர்களிடம் இருந்துதான் இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவூகிறது. கொவிட் -19 இருக்கும் நபர் இருமும் போதோ அல்லது சுவாசிக்கும் போதோஇ மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவூகிறது.

சில சமயம் இந்தத் துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய்ப் பாதிப்பு இல்லாத நபர் இந்தத் துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண்இ மூக்குஇ வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது.

அந்தத் துளிகளை சுவாசம் மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும். இதனால்தான் நோய்வாய்ப்பட்டவரிடமிருந்து 1 மீற்றருக்கு (3 அடி) அதிகமான தூரத்தில் தள்ளி இருக்க வேண்டியது அவசியம்.

ஒருவரை வைரஸ் தாக்கியதற்கும்இ நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிப்பதற்கும் இடைப்பட்ட காலமே ஐnஉரடியவழைn pநசழைன. இதுவரை கணித்ததிலிருந்து கோவிட்-19 நோய்க்கான ஐnஉரடியவழைn pநசழைன ஒன்று முதல் பதினான்கு நாட்கள் ஆகும். பொதுவாக ஐந்து நாட்களிலேயே பலருக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விடும்.

(உலக சுகாதார அமைப்பின் தகவல்களின் பிரகாரம் எழுதப்பட்ட கட்டுரை)

 

Sat, 04/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை