வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து,  சிகிச்சை பெற்று வந்த பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் (55) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். 

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரிட்டிஷ் பிரதமர், 10 நாட்களுக்கு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால்,  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் லண்டனிலுள்ள புனித தோமஸ் வைத்தியசாலையில் கடந்த 05ஆம் திகதி  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து  அவர் 03 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவரது தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் இன்று (12) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

Sun, 04/12/2020 - 18:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை