கிளிநொச்சியில் களைகட்டிய புத்தாண்டு வியாபாரம்

கிளிநொச்சியில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அதிகளவில் ஆடை வியாபாரம் களைகட்டியிருந்தனை அவதானிக்க முடிந்தது.

வடக்கில் யாழ்ப்பாணம் தவிரந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்கு காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை தளர்த்தப்பட்டிருந்தது.

இதன்போது அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதுக்கு மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டியிருந்தனர். குறிப்பாக சந்தைகள், சதொச விற்பனை நிலையங்கள், வங்கிகள், மருந்தகங்கள் போன்றவற்றில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டன.

எனினும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறிவகைகளின் விலைகள் அதிகளவில் காணப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள வியாபார நிலையங்களில் இப் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனாலேயே தாம் நகரங்களை நோக்கி வருகைதந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதேநேரம் ஆடை விற்பனை வியாபாரிகளும் பெருமளவில் கிளிநொச்சி நகர் பகுதியில் வியாபார நடடிக்கையில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக மக்களும் புத்தாண்டை முன்னிட்டு சிறுவர்களுக்கான ஆடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

இதேவேளை மக்கள் அதிகளவில் வந்த போதும் மக்கள் சமுக இடைவெளியை கடைப்பிடித்ததுடன் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

பரந்தன் குறூப் நிருபர்

Fri, 04/10/2020 - 06:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை