மருதமுனையில் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை

மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஊடக  இரண்டாயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளாந்தம் தொழில்செய்யும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தை மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா சபை, பொது அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.

பல்வேறு தாப்பினர் ஊடாகவும் சேகரிக்கப்பட்ட நிதிகள், பொருட்கள் தற்போது அனர்த்த மத்திய நிலையமாக செயற்படும் மருதமுனை மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் பயனாளிகளுக்கான உலர் உணவு பொதிகள் பிரதேச செயலகம், பொலிஸார், மற்றும்  இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளன என அனர்த்த மத்திய நிலையத்தின் செயலாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன் தெரிவித்துள்ளார்.

(ஏ.எல்.எம். ஸினாஸ் - பெரியநீலாவணை விசேட நிருபர்)

Wed, 04/01/2020 - 13:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை