தியாகம், உலகின் ஆன்மீக வலிமையை அதிகரிக்கும்

தியாகம், உலகின் ஆன்மீக வலிமையை அதிகரிக்கும்-PM Mahinda Rajapaksa Easter Sunday Greeting

பிரதமரின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களும், இலங்கையில் உள்ள எமது சகோதர கிறிஸ்தவர்களும் இன்று, இயேசு நாதர் தனது மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுகிறார்கள்.

கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சோகமான நினைவுகள் உங்கள் மனத்தில் இன்னும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற எதுவும் நடக்காமல் நமது தாய்நாட்டைப் பாதுகாப்பது அரசாங்கமாகிய நமது பொறுப்பாகும்.

இயேசு கிறிஸ்து, "என் சீடனாக விரும்புகிறவன் தனது சுயநலத்தை தவிர்த்து, சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்தொடர்வான்" என்று கூறியுள்ளார். அவர் சிலுவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வழங்கியுள்ளார். இந்த தியாகம் அவரது வாழ்க்கையின் இலட்சியத்தை அவர் பிரசங்கித்த வாழ்க்கை முறையைப் பற்றிய ஆழமான ஆய்வாக மாற்றும் என்றும் உலகின் ஆன்மீக வலிமையை அதிகரிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

முழு உலகமும் ஒரு பயங்கரமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இலங்கையர்களும் இதே ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். தேவாலயங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லாமல், தமது மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதன் மூலம், நமது தாய்நாட்டை இந்த பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக அரசாங்கமாக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கான ஒத்துழைப்பாக நான் கருதுகிறேன்.

இலங்கையின் அனைத்து மதத்தவர்களுக்கும், குறிப்பாக இன்று தேவாலயத்திற்குச் செல்லாது, தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் வழிபாடுகளை மேற்கொண்டுள்ள கிறிஸ்தவ சமூகத்திற்கும், நீங்கள் செய்த அர்ப்பணிப்பு தொடர்பில், இலங்கை மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்.

மஹிந்த ராஜபக்ஷ
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

Sun, 04/12/2020 - 13:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை