மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு; விலை உயர வாய்ப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. இதனால், பெற்றோலிய எரிபொருள் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.

அதனால், ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து, பெற்றோலிய ஏற்றமதி நாடுகளின் அமைப்பான, 'ஓபெக்' மற்றும் அதன் கூட்டணி நாடுகள், நேற்றுமுன்தினம் இரவு காணொலி மூலம் கலந்தாலோசித்தன. அதில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, நேற்று (10ம் திகதி) காலை நடந்தது. அதில், உற்பத்தியைக் குறைக்க முடிவாகியுள்ளது.

குறிப்பாக, வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில், நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி பரல்கள் (ஒரு பரல் 158.9 லீட்டர்) அளவிற்கு உற்பத்தியை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஏப்., வரை படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கவும் முடிவாகியுள்ளது. உலகளாவிய விநியோகத்தில் இது 10 சதவீதமாகும். இதனால், பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Sat, 04/11/2020 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை