குளிர் நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை 859,295 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் பார்த்தால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நேற்றுமுன்தினம் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். அங்க கொரோனாவால் 105,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் இத்தாலியில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 748 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 4053 பேர் இறந்துள்ளனர். அங்கு நேற்றுமுன்தினம் மட்டும் 24,742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 188530 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதிக இறப்பில் 3வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 748பேர் உயிரிழந்துள்ளனர், ஒட்டுமொத்தமாக 8464பேர் உயிரிழந்துள்ளனர். 95923 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் புதிதாக 7967பேர் பாதிக்கப்பட்ட்டனர்.

பிரான்சில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 499 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3523 ஆக அதிகரித்தது. பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் 5212 8பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 7578 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 381 பேர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3009 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25150 ஆக உயர்ந்தது. பெல்ஜியத்தில் நேற்றுமுன்தினம் மட்டும் 192பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 705ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் புதிதாக 845பேர் பாதிக்கப்பட்டதால் 12595 ஆக அதிகரித்துள்ளது.

நெதர்லாந்தில் மார்ச் 31ம் திகதியான நேற்றுமுன்தினம் மட்டும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 1039 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 845 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12595 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் நேற்றுமுன்தினம் 141 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு  கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2898 ஆக உயர்ந்தது. ஈரானில் நேற்றுமுன்தினம் 310 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,   மொத்தமாக 44605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் நேற்றுமுன்தினம் 130 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 775 ஆக அதிகரித்தது.அங்கு 4923பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,  மொத்தமாக 71808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் அனைத்துமே மிகுந்த குளிர் பிரதேசங்கள் ஆகும். மேற்கண்ட நாடுகள் எல்லாமே 15 பாகை செல்சியஸ்க்கும் குறைவான வெப்ப நிலை உள்ள நாடுகள் ஆகும். அதேநேரம் வெயில் அதிகம் உள்ள நாடுகள் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதும் உண்மை.

இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை. குளிர் பிரதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது பாதிப்பும் பெரிதாக இல்லை.

Thu, 04/02/2020 - 08:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை