க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் கிழக்கு 7ஆம் இடம்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர்

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண மட்ட பரீட்சையின் பெறுபேறுகளை தேசிய ரீதியில் ஆராயும்போது  கிழக்கு மாகாணம் 7ம் இடத்தைப்பிடித்துள்ளதென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் பெருமிதத்தோடு தெரிவித்தார். கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. இதுபற்றி ஊடகவியலாளர்கள் அவரது கருத்தை அறிய முற்பட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன் நடந்த பல பரீட்சைகளில் கிழக்கு மாகாணம் இலங்கையின் கடைசி நிலைக்கே வந்து கொண்டிருந்தது. கடந்த வருடத்திலிருநது அது மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியெ இதுவாகும்.

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தர பரீட்சையின் பெறுபேற்றில் கிழக்கு மாகாணம் தேசிய ரிதியில்  4ம் இடத்தை பிடித்திருந்தது. அதில் ஏற்பட்ட மாற்றம் தொடர்கிறது.

இப்போது அது கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த முன்னேற்றத்திற்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பாடங்களுக்கு பொறுப்பாயிருக்கும் பணிப்பாளர்கள், நிர்வாகப் பணிப்பாளாகள், வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களது உதவிப் பணிப்பாளர்களும், மாணவர்கள், பெற்றோர்கள் என பல தரப்பட்டோர் பங்களிப்பு செயதிருந்தனர். அவர்கள் அனைவரது கூட்டு முயற்சியே இவ் வெற்றிக்கு காரணம். அவர்கள் எல்லோருக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

 புளியந்தீவு குறூப், காரைதீவு குறூப்

Wed, 04/29/2020 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை