60 வயதுக்கு மேற்பட்டோர் அவதானம்!

60 வயதுக்கு மேற்பட்டோர் அவதானம்!-More than 60 Yr Old Must be Careful-COVID19-Precautions GMOA

- ஒருவரிடமிருந்து ஒரு மாதத்தில் 406 பேருக்கு பரவக்கூடியது
- 80 சதவீதமானோர்‌ மேலோட்டமான பார்வைக்கு இனங்காண முடியாது
- 20 சதவீதமானோருக்கு நோய்க்‌ குணங்குறிகள்‌ வெளிப்படமாட்டா
- 60 வீதமானோருக்கு எளிய குணங்குறிகளே தென்படும்

கொரோனா நோயின்‌ பாதிப்புகளுக்கும்‌ மரணத்திற்கும்‌ இலக்காகுவதற்கு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் வெளியில் செல்லாது வைத்திருக்க வேண்டும் என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயானது நாட்டினுள்‌ பரவுவதைக்‌ கட்டுப்படுத்தல்‌ தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகளின்‌ சங்கத்தினது இந்‌ நேரத்திற்குரிய உத்தேசங்கள்‌

கொரோனா வைரஸ்‌ தொற்றுடன்‌ இலங்கையில் முதலாவது இலங்கையர் இனங்காணப்பட்டு தற்போது 20 நாட்கள்‌ கடந்துள்ளன.

நாம்‌ பதில்‌ நடவடிக்கைகள்‌ எடுக்கவேண்டிய விதம்‌ பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கு பின்வரும்‌ காரணிகள்‌ தொடர்பாக அவதானம்‌ செலுத்த வேண்டும்‌.

  1. இந்‌ நோயானது மிக வேகமாகப்‌ பரவும்‌ அதேவேளை, திட்டவட்டமான எதிர்‌ நடவடிக்கைகள்‌  மேற்கொள்ளப்படாதவிடத்து, ஒரு நபரிடமிருந்து ஒரு மாதத்தினுள்‌ இன்னும்‌ 406 பேருக்குப்‌ பரவக்கூடிய அபாயமுள்ள நோயாகும்‌.
  2. நோயாளர்களில்‌ 20 சதவீதமானோருக்கு நோய்க்‌ குணங்குறிகள்‌ வெளிப்படமாட்டா. இன்னும்‌ 60 சதவீதமானோருக்கு மிகவும்‌ எளிய நோய்க்‌ குணங்குறிகளே வெளிப்படும்‌. அதனால்‌ உண்மையாகவே கொரோனா வைரஸ்‌ தொற்றுக்கு இலக்காகி நோயை வேறு நபர்களுக்குப்‌ பரப்பும்‌ நோயாளர்களில்‌ 80 சதவீதமானோர்‌ மேலோட்டமான பார்வைக்கு நோயாளர்களாக இனங்காண முடியாத வகையைச்‌ சேர்ந்தோராவர்‌. அதனை மறைந்திருந்து நோயைப்‌ பரப்பும்‌ வகையாக அடையாளப்படுத்தலாம்‌.
  3. கொரோனாவை இனங்காணக்கூடிய PCR பரிசோதனையின்‌ உணர்திறன்‌ 70 சதவீதமாகும்‌. அதாவது இப்‌ பரிசோதனைக்கு உட்படுவோரில்‌ 30 சதவீதமானோர்‌ உண்மையாக நோயைக்‌ கொண்டிருந்தபோதும்‌ நோயாளர்களாக இனங்காணப்பட மாட்டார்கள்‌. அவர்களால்‌ ஏனையோருக்கு கொரோனா வைரஸ்‌ பரவக்கூடியதால்‌ இந்‌நிலை அயாயகரமானதாகும்‌.
  4. மேலும்‌. கொரோனா பரவலைக்‌ குறைக்கும்‌ வழிமுறையாக மக்கள்‌ நடமாட்டம்‌ கட்டுப்படுத்தப்படுமெனின்‌ அதனை 80 முதல்‌ 90 சதவீதமாகப்‌ பேணுதல்‌ அத்தியாவசியமாகும்‌. ஆனாலும்‌ மக்களின்‌ அன்றாடத்‌ தேவைகளைப்‌ பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி அது தளர்த்தப்படுவதால்‌ திறனான கட்டுப்பாட்டைப்‌ பேணுதல்‌ பிரயோக ரீதியாக சவாலுக்கு உட்படுகின்றது.
  5. அதே போல்‌ சிறு எண்ணிக்கையான மக்கள்‌ பொறுப்பின்றிய விதத்தில்‌ செயற்படுவதைக்‌ காணக்கூடியதாக உள்ளது. அம்‌ மக்களின்‌ எண்ணிக்கை சிறிதாக இருப்பினும்‌ அவர்களால்‌ விளையக்கூடிய கேடு மிகப்‌ பெரிதாகும்‌.

எனவே. மேற்படி காரணிகளை வைத்து இலங்கையினுள்‌ கொரோனா வைரஸிற்கு முகங்கொடுக்கும்‌ வழிமுறையானது பின்வருமாக அமைய வேண்டுமென நாங்கள்‌ செய்த ஆய்வுகளின்‌ அடிப்படையில்‌ முன்மொழிகின்றோம்‌.

இங்கு 3 பிரதான காரணிகளின்‌ அடிப்படையில்‌ எங்களது உத்தேசமானது அமைக்கப்பட்டுள்ளது.
A. தனிநபர்களின் நடமாட்டத்கக் கட்டுப்படுத்தல் - ஆகக் குறைந்தது 80 சதவீதமான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
B. தீவிரமான விதத்தில்‌ நோயாளர்களை இனங்காணுதல்‌ - பரிசோதனை வசதிகளை மேம்படுத்தல்‌
C. சிகிச்சை சேவைகளை மேம்படுத்தல்‌ - நோய்ச்‌ சிகிச்சைக்கென பிரத்தியேகமாக மருத்துவமனைகளை ஏற்பாடு செய்தல்‌.

உத்தேசம்‌ A

  • இதற்காக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தல்‌ போன்ற இதுவரை முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகள்‌ இன்னும்‌ தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்‌. அதேபோல்‌ நோயாளர்களின்‌ தொடர்பாளர்கள்‌ பன்‌ முறையில்‌ தனிமைப்படுத்தப்படல்‌ அத்தியாவசியமாகும்‌.
  • தற்போது நாம்‌ அறிந்த சர்வதேச அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ நோய்க்கு இலக்காகுதல்‌ மற்றும்‌ நோயின்‌ சிக்கல்களுக்கும்‌ மரணத்திற்கும்‌ இலக்காகுவதற்கு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மருத்துவமனைகளின்‌ தீவிர சிகிச்சைப்‌ பிரிவுகளில்‌ பெருமளவான கட்டில்கள்‌ இவ்‌ வகையானோருக்காக ஒதுக்கப்படவுள்ளன. அதன்படி 60 வயதிற்கு மேற்பட்டோரை வீடுகளுக்குள்ளேயே தங்கவைத்துக்‌ கொள்வதற்கு வழிமுறைகள்‌ செய்யப்பட வேண்டும்.
  • அத்தியாவசிய சேவைகளுக்காக பணியாளர்களை ஈடுபடுத்துகையில்‌ அதற்காக நோயற்ற இளம்‌ பணியாளர்களை மாத்திரம்‌ ஈடுபடுத்த முயற்சி செய்ய வேண்டும்‌.

உத்தேசம்‌ B

  • சமூகத்திலுள்ள சகல நோயாளர்களையும்‌ இனங்கண்டு சிகிச்சைக்காக அனுப்புவதற்கு இயலுமான அனைத்து முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.
  • தற்போது உலகிலுள்ள விரைவாக நோயை இனங்காணும்‌ பரிசோதனைகளைப்‌ பயன்படுத்தி வலிதாக நோயாளர்களை இனங்காண வேண்டும்‌. சமீப காலத்தினுள்‌ பரிசோதனை முறைகள்‌ சில கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன்‌ அதற்கான செலவும்‌ குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. இப்‌ பரிசோதனைகளை எம்‌ நாட்டினுள்‌ கொண்டுவருவதற்கு இராஜதந்திரத்‌ தொடர்புகளைப்‌ பயன்படுத்த முடியும்‌, (உதாரணம்‌: சீனாவுடன்‌)
  • இப்‌ பரிசோதனைகளின்‌ உணர்திறன்‌ குறைவு என்பதால்‌ 1/3 வரையான உண்மையான நோயாளர்கள்‌ நோயைக்‌ கொண்டுள்ளபோதும்‌ இனங்காண முடியாமல்‌ சமூகத்திற்கு விடுவிக்கப்படுவார்கள. இதற்குத்‌ தீர்வாக தற்போது நோயைக்‌ கொண்டிருப்பதாக சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்‌ சகலரையும்‌ சில நாட்களுக்கு  ஒரு முறை பரிசோதனைக்கு உட்படுத்தி தவறவிடப்படும்‌ எண்ணிக்கையைக்‌ குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்‌. உலக சுகாதார நிறுவனமானது “Test, Tes, Test” என முன்மொழிந்திருப்பது அத்தகைய ஒரு வழிமுறையாகும்‌.

உத்தேசம்‌ C

  • நோய்ச்‌ சிகிச்கைச்கான இவ்‌ வழிமுறையை எந்தவித தாமதமும்‌ இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும்‌. மேற்படி இனங்காணப்படும்‌ நோயாளர்களுக்காக தீவிர சிகிச்சை உட்பட வசதிகள்‌ உள்ள, கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட விசேட மருத்துவமனையொன்று இருத்தல்‌ மிகவும்‌ பொருத்தமானது என்பது எங்கள்‌ நிலைப்பாடாகும்‌. 700 கட்டில்களை உடைய, நவீன வசதிகளைக்‌ கொண்ட மருத்துவமனையான கொத்தலாவல பாதுகாப்புப்‌ பல்கலைக்கழக மருத்துவமனையை நாம்‌ அதற்காக முன்மொழிவது அதற்காகவேயாகும்‌. நோயாளர்களின்‌ எண்ணிக்கை குறையும்‌ போது இம்‌ மருத்துமனை இச்‌ செயற்பாட்டிலிருந்து விடுவிக்கப்படலாம்‌.

IDH‌ மருத்துவமனையின்‌ கொள்ளளவை மேலும்‌ அதிகரிப்பதன்‌ மூலம்‌ கொத்தலாவல மருத்துவமனையை விடுவித்தலை மேலும்‌ விரைவுபடுத்தலாம்‌.

எங்களால்‌ மேலே முன்மொழியப்பட்ட சகல உத்தேசங்களையும்‌ கருத்திற்கொண்டு இச்‌ சந்தர்ப்பத்தில்‌ எடுக்கவேண்டிய தீர்மானங்களை மேலும்‌ தாமதமின்றி மேற்கொள்வதன்‌ மூலம்‌ எதிர்வரக்கூடிய கொரோனா பரவல்‌ நிலையொன்றை நாட்டினுள்‌ தடுத்துக்கொள்ளக்‌ கூடியதாக இருக்கும்‌.
- இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம்

60 வயதுக்கு மேற்பட்டோர் அவதானம்!-More than 60 Yr Old Must be Careful-COVID19-Precautions GMOA

60 வயதுக்கு மேற்பட்டோர் அவதானம்!-More than 60 Yr Old Must be Careful-COVID19-Precautions GMOA

Thu, 04/02/2020 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை