6ஆவது கொரோனா மரணம் பதிவு; மேலும் 2 பேர் அடையாளம் (UPDATE)

இலங்கையில் 6ஆவது கொரோனா மரணம்; 80 வயது ஆண் பலி-மேலும் 2 பேர் அடையாளம்-6th COVID19 Dead Reported-80 Yr Old Male at IDH

- சிகிச்சை பெறுவோர் 136 பேர்; கண்காணிப்பில் 257 பேர்
- பிரிட்டனில் வசிக்கும் இலங்கையர் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.

தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை 10.00 மணியளவில் அவர் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (07) காலை 9.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 178 இலிருந்து 180 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான முதலாவது மரணம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பதிவானது. 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இரண்டாவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

மூன்றாவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி பதிவானது. 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர் மரணித்திருந்தார்.

நான்காவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான ஆண் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் மரணமடைந்தார்.

இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்ற 52 வயதான நபர் ஒருவர், அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மெல்பர்னில் மரணமடைந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பிரிட்டனில் வசிக்கும் 72 மற்றம் 62 வயதான இலங்கையர் இருவர் மரணமடைந்துள்ளதாக இன்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.

இதேவேளை மார்ச் 25ஆம் திகதி யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான நபர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் 6 பேரும், இலங்கையில் 5 பேரும் என இலங்கையர் 11 பேர் கொரோனா தொற்றினால் இது வரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றையதினம் (07) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 180 பேரில் தற்போது 136 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 06 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 257 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 180
குணமடைவு - 38

சிகிச்சையில் - 136
மரணம் - 06

இலங்கையில் - 06
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 06
பிரிட்டனில் - 02 பேர் (06)
மெல்பர்னில் - ஒருவர் (04) (அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை)
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 38
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 180
ஏப்ரல் 07 - 02 பேர் (180)
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

 

Tue, 04/07/2020 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை