எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த 54 வயது நபர் பலி

கொலன்னாவ எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளார்.

எண்ணெய்த் தாங்கி ஒன்றின் கொள்ளளவை அளப்பதற்காக அதில் ஏறிய குறித்த நபர், அதிலிருந்து நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர் 54 வயதான, கட்டுகொட, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tue, 04/14/2020 - 13:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை