காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் ரூ. 5,000 கொடுப்பனவு

காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் ரூ. 5,000 கொடுப்பனவு-More Allowance-Elders-Kidney Patients-Special Need People

இன்று வீடுகளுக்கு சென்று வழங்கி வைப்பு

முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, காத்திருப்பு பட்டியலிலும் உள்ளடக்கப்படாதவர்களுக்கு மேலும் ரூ. 5,000 கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்து.

முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே ரூ. 5,000 கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் ரூ. 5,000 கொடுப்பனவு-More Allowance-Elders-Kidney Patients-Special Need People

அது தவிர, இக்கொடுப்பனவை இது வரை பெறாத அல்லது காத்திருப்பு பட்டியலில் இல்லாத ஆனால் கிராமிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு ரூ. 5,000 கொடுப்பனைவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 574,387 முதியவர்கள் தவிர்ந்த இதற்கு மேலதிகமாக, 61,615 பேருக்கு ரூ.5,000 முதியோர் கொடுப்பனவை வழங்கப்படவுள்ளது.

தற்போது கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 109,494 விசேட தேவையுடையவர்களுக்கு மேலதிகமாக 14,195 பேருக்கு ரூ.5,000 கொடுப்பனைவு செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 38,747 சிறுநீரக நோயாளிகளுக்கு மேலதிகமாக, மேலும் 5,884 பேருக்கு ரூ.5,000 கொடுப்பனைவு செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகள் இன்றையதினம் (15) கிராம சேவகர்களால், குறித்த பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (15) பெண்கள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி ஏ.எஸ்.எம்.எஸ். மகானாம, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Wed, 04/15/2020 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை