போதைக்கு அடிமையான 5 பேர் உள்ளிட்ட 7 பேர் அடையாளம்; 197

போதைக்கு அடிமையான 5 பேர் உள்ளிட்ட 7 பேர் அடையாளம்; 197-7 More COVID19 Patients Identified-Total Up to 197

- கடற்படையால் கைது செய்யப்பட்டு ஒலுவிலுக்கு அனுப்பப்பட்டோரில் 06 பேர்
- தெஹிவளையில் அடையாளம் காணப்பட்ட வர்த்தகருடன் தொடர்புபட்ட ஒருவர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்றையதினம் (10) இரவு 11.30 மணியளவில் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்த நபர்களில் 06 பேர், ஜா-எல, சுதுவெல்ல கிராமத்தில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, ஒலுவிலுக்கு தனிமைப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட 23 பேரில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் குறித்த பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் மனைவி ஒருவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தெஹிவளையைச் சேர்ந்த வர்த்தகருடன் தொடர்பைக் கொண்ட ஒருவரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அண்மையில் ஜா-எல, சுதுவெல்லவில் வசிக்கும் வாடகை வாகன சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த சாரதி, பொலிஸாரின் தலையீட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த 23 பேரையும், ஜா-எல பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் மூலம், தங்கள் சொந்த வீடுகளில் சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயினும், போதைப்பொருளுக்கு அடிமையான இவர்கள் விதிகளை மீறி அப்பகுதியில் நடமாடித் திரிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே குறித்த நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒலுவிலுக்கு தனிமைப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதற்கமைய நேற்று (10) இரவு 11.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 190 இலிருந்து 197 ஆக அதிகரித்துள்ளது.

எனவே நேற்றையதினம் (10) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோட, 05 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 197 பேரில் தற்போது 136 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 224 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 197
குணமடைவு - 54
சிகிச்சையில் - 136
மரணம் - 07

மரணமடைந்தவர்கள் - 07
இலங்கையில் - 07

ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 14
பிரிட்டனில் - 09 பேர் (14)
அமெரிக்காவில் - 02 பேர் (05)
இத்தாலி - ஒருவர் (03)
மெல்பர்னில் - ஒருவர் (02) (அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 54
ஏப்ரல் 10 - 05 பேர் (54)
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 197
ஏப்ரல் 10 - 07 பேர் (197)

ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 07 பேர் (185)
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

Sat, 04/11/2020 - 10:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை