கொரோனாவினால் உயிரிழந்தோர் 47,000 ஐ தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அத்தோடு  வைத்தியசாலைகளில்  இன்னும் சுமார் 07 இலட்சம் மக்கள் சிகிச்சைக்காக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதுமாக 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்று  காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 9 இலட்சத்து 35 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 286 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில்35 ஆயிரத்து610 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 06 இலட்சத்து 94 ஆயிரத்து 426 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

Thu, 04/02/2020 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை