433 மாணவர்கள் நாடு திரும்ப ஏற்பாடு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக விசேட விமானம் சேவை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் முன்னெடுக்கப்படவுள்ளது.  

இந்தியாவின் அமிருதசரசு மற்றும் கோயம்புத்தூரிலும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரிலும் நேபாளத்தின் காத்மண்டுவிலும் சுமார் 433 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை அழைத்து வருவதற்காக விசேட விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இவ்விசேட விமான சேவையானது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின் ஒருபகுதியாக வெளிவிவகார அமைச்சின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுவதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் வூஹான் நகரில் சிக்கிய மாணவர்களை அழைத்து வருதல் உட்பட யாத்திரிகர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து வருவதற்காக இதற்கு முன்னரும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் விசேட விமான சேவைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Tue, 04/21/2020 - 13:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை