உலக அளவில் கொரோனா தொற்றியோர் 30 இலட்சம் பேர்

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 மில்லியனைக் கடந்துள்ளதோடு, இந்நோய்த் தொற்றினால் 207,265 உயிரிழப்புகளும் இதுவரையில் சம்பவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கொரோனா வைரஸ்  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 883, 306 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளதாகவும், அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா, ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்தாண்டு  டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வைரஸிற்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் இடம்பெற்று வந்தாலும், மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பிலிருந்து பலர் மீண்டு வந்த வண்ணமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Mon, 04/27/2020 - 19:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை