இலங்கையில் 25 பேர் இது வரை குணமடைந்துள்ளனர்

இலங்கையில் 25 பேர் இது வரை குணமடைந்துள்ளனர்-One More COVID19 Patient Recovers-Total Up to 25

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அதற்கமைய, இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 25 பேர் இலங்கையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 159 ஆகும்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 159 பேரில் தற்போது 130 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தினம் மரணித்தவருடன் இது வரை 05 பேர் மரணமடைந்துள்ளனர்.

அந்த வகையில் குணமடையும் வீதம் 15.7% வீதமாக அமைந்துள்ளதுடன், மரண வீதம் 0.3 வீதமாக அமைந்துள்ளது.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 273 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 159
குணமடைவு - 25

சிகிச்சையில் - 129
மரணம் - 05

மரணமடைந்தவர்கள் (08)
இலங்கையில் - 05
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 25
ஏப்ரல் 04 - ஒருவர் (25)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 159
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

Sat, 04/04/2020 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை