இருவர் குணமடைவு - 24; ஒருவர் அடையாளம் - 152

இருவர் குணமடைவு - 24; ஒருவர் அடையாளம் - 152-COVID19SL-One Identified-2 Recovered

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அதற்கமைய இது வரை 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 154 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (02) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் இன்றையதினம் இது வரை 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமான மரணம் 55,092 ஆக பதிவாகியுள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை (1,039,166) கடந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 152 பேரில் தற்போது 124 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 04 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 250 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 152
குணமடைவு - 24

சிகிச்சையில் - 124
மரணம் - 04

மரணமடைந்தவர்கள் (07)
இலங்கையில் - 04
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 24
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 152
ஏப்ரல் 03 - ஒருவர் (152)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

Fri, 04/03/2020 - 19:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை