மேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 219

மேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 219-One More COVID19 Patient Identified-Total Up to 219

- சிகிச்சையில் உள்ள நோயாளிகள் 153; கண்காணிப்பில் 142 பேர்
- கொழும்பில் 45; களுத்துறையில் 44; புத்தளம் 34; கம்பஹா 25 கொரோனா நோயாளிகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று (14) பிற்பகல் 3.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 218 இலிருந்து 219 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (14) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பதோடு, 03 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றி அடையாளம் காணப்பட்டவர்களில் மாவட்ட ரீதியாக ஆகக் கூடுதலாக கொழும்பைச் சேர்ந்த 45 பேரும் களுத்துறையைச் சேர்ந்த 44 பேரும் புத்தளத்தைச் சேர்ந்த 34 பேரும் கம்பஹாவைச் சேர்ந்த 25 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அதற்கு அடுத்த படியாக கண்டியில் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 219 பேரில் தற்போது 153 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 142 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 219
குணமடைவு - 59
சிகிச்சையில் - 153
மரணம் - 07

மரணமடைந்தவர்கள் - 07
இலங்கையில் - 07

ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 15
பிரிட்டனில் - 09 பேர் (15)
அமெரிக்காவில் - 02 பேர் (06)
பிரான்ஸ் - ஒருவர் (04)
இத்தாலி - ஒருவர் (03)
மெல்பர்னில் - ஒருவர் (02) (அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 59
ஏப்ரல் 14 - 03 பேர் (59)
ஏப்ரல் 13 - 00 பேர் (56)
ஏப்ரல் 12 - 02 பேர் (56)

ஏப்ரல் 11 - 00 பேர் (54)
ஏப்ரல் 10 - 05 பேர் (54) 
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 02 - 00 பேர் (21)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 24 - 00 பேர் (02)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 218
ஏப்ரல் 14 - 08 பேர் (219)
ஏப்ரல் 13 - 08 பேர் (218)
ஏப்ரல் 12 - 11 பேர் (210)
ஏப்ரல் 11 - 02 பேர் (199)
ஏப்ரல் 10 - 07 பேர் (197)
ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 07 பேர் (185)
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

Tue, 04/14/2020 - 16:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை